தற்போதைய செய்திகள்

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

10th Nov 2020 02:53 PM

ADVERTISEMENT

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மேற்கு தில்லியின் திருநகர் பகுதியில் பழைய 3 மாடிக் கட்டடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில், சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வீரேந்தர் (வயது 22) என்ற இளைஞர் பலியானார்.

தில்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில்,

“திங்கள்கிழமை காலை 10:10 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததாக அழைப்பு வந்தது. மீட்பு நடவடிக்கைக்காக உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : new delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT