தற்போதைய செய்திகள்

'காங்கிரஸ் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது’ : குஜராத் முதல்வர்

10th Nov 2020 03:13 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல், இவர்கள் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டார்கள் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள காலியான தொகுதிகளுக்கு  நடத்தப்பட்ட இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது, அதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

இதுகுறித்து முதல்வர் ரூபானி கூறுகையில்,

ADVERTISEMENT

“காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அவர்கள் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டார்கள். அனைத்து இடங்களிலும் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எதிராக உள்ளன.

குஜராத் இடைத்தேர்தல் முடிவானது, மற்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம்” என கூறினார்.

 

Tags : Vijay Rupani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT