தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

10th Nov 2020 06:53 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ. 1.85 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எமிரேட்ஸ் விமானம் மூலம் துபையிலிருந்து திங்கள்கிழமை வந்த 3 பயணிகளை சோதனை செய்யப்பட்டனர்.

அதில், ஒரு பயணி முகமூடியில் 114 கிராம் எடையுள்ள தங்க பேஸ்ட்கள் தைக்கப்பட்டிருந்தன, மேலும் 50 கிராம் எடையுள்ள ஒரு தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டன.

ADVERTISEMENT

அவரைத் தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட மற்ற மூன்று பேரிடம் இருந்து 16 பாக்கெட் தங்க பேஸ்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்க சட்டம் 1962 இன் கீழ், ரூ .97.82 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கங்கள்

இதனைத் தொடர்ந்து, முன்னதாக துபையில் இருந்து வந்த இண்டிகோ மற்றும் எமிரேட்ஸ் விமானங்கள் மூலம் வந்த ஏழு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ .87.48 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT