தற்போதைய செய்திகள்

11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி

10th Nov 2020 11:04 PM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 28 பேரவைத் தொகுதிகள், குஜராத்தில் காலியாக இருந்த 8 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிசா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்காில் காலியாக இருந்த தலா 1 இடங்களுக்கும் கடந்த 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 5 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மத்தியப் பிரதேசம் தவிர மற்ற 10 மாநிலங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

மாநிலம் மொத்த தொகுதிகள் வெற்றி பெற்றவர்கள்
குஜராத் 8 பாஜக - 8
உத்தரப் பிரதேசம் 7

பாஜக - 6

சமாஜவாதி - 1

ஜார்க்கண்ட் 2

காங்கிரஸ் - 1

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -1 

கர்நாடகம் 2 பாஜக - 2
நாகாலாந்து 2

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி - 1

சுயேச்சை - 1

ஒடிசா 2 பிஜு ஜனதா தளம் - 2
மணிப்பூர் 5

பாஜக - 4

சுயேச்சை - 1

ஹரியாணா 1 காங்கிரஸ் - 1
சத்தீஸ்கா் 1 காங்கிரஸ் - 1
தெலங்கானா 1 பாஜக - 1

மத்தியப் பிரதேசம்:

28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. முடிவுகள் வெளியான 22 தொகுதிகளில் பாஜக 16, காங்கிரஸ் 6 இடங்களை வென்றுள்ளன.

மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

Tags : by election result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT