தற்போதைய செய்திகள்

‘லாவா ஃபிளிப்’ போன் அறிமுகம்

9th Nov 2020 07:02 PM

ADVERTISEMENT

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா, திங்கள்கிழமை ‘லாவா ஃபிளிப்’ போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘லாவா ஃபிளிப்’ மாதிரி செல்லிடப்பேசி, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரு வண்ணங்களில், வெறும் ரூ. 1,640க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் விற்பனை தொடங்கியுள்ளது.

இந்த மாதிரி, 2.4 அங்குல டிஸ்ப்ளேவும், 32 ஜி.பி. வரை விரிவிபடுத்தி பயன்படுத்திக் கொள்ளும்படியான சேமிப்பு வசதியும் கொண்டுள்ளது.

2 சிம் கார்டு உபயோக்கும் வசதியும், ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் 3 நாள் நிற்கும்படியான 1,200 எம்.ஏ.எச். சூப்பர் லி-அயன் பேட்டரி வசதியும் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

22 மொழிகளில் குறுஞ்செய்தி உள்வரும் வகையிலும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்பட 7 மொழிகளில் தட்டச்சு செய்யவும் உதவுகிறது.

ஓர் ஆண்டு வரை மாற்று உத்தரவாதமும் தரப்படுகிறது.

லாவா நிறுவனத்தின் தயாரிப்புத்துறை தலைவர் தேஜிந்தர் சிங் கூறுகையில்,

“நவீனகாலத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான தொலைபேசியானது, கண்கவர் தோற்றம் மட்டுமல்லாமல், சுவாரஸ்யமான அம்சங்களும் வழங்குவது அவசியம். இந்த ஃபிளிப் மாதிரி வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

Tags : Lava
ADVERTISEMENT
ADVERTISEMENT