தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

31st May 2020 10:47 AM

ADVERTISEMENT


தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்த ராமச்சந்திரனை உடன் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். 

உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .

அவருக்கு காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT