தற்போதைய செய்திகள்

முழு ஊதியம் வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

31st May 2020 12:56 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: முழு ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தில் கழித்தம் செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும். கரோனா பரவலை தடுப்பதற்காகப் போக்குவரத்துக் கழக அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 50 சதவீதம் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொமுச கிளைச் செயலர் ராஜேந்திரன், சிஐடியு மத்திய சங்கத் துணைச் செயலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, கரந்தை பணிமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர். மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனையில் தொமுச மத்திய சங்கத் துணைச் செயலர் ஆர். ஜெயச்சந்திரன் தலைமையில் ஏஐடியுசி பொதுச் செயலர் கே. சுந்தரபாண்டியன், ஐஎன்டியுசி மத்திய சங்கத் துணைச் செயலர் ஜி. கணேசமூர்த்தி, துரை. மதிவாணன், ஆர். மனோகரன் உள்ளிட்டோர் உயர் அலுவலர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT