தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் ஒலி ஒளி பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

31st May 2020 01:08 PM

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஆத்தூரில் கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் நடைபெறும் ஊரடங்கால் ஒலி ஒளி பந்தல்அமைப்பாளர்கள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் நிவாரண தொகுப்பை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் வழங்கினார்.

அவருடன் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அ.மோகன் அயோத்தியாப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் இராஜா நரசிங்கபுரம் நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.முஸ்தபா காளிமுத்து இளையராஜா மகபூல்பாஷா ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்க தலைவர் காமராஜ் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT