தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் உள்பட 9 பேருக்கு தொற்று உறுதி

31st May 2020 01:18 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் உள்பட 9 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின்  எண்ணிக்கை 70 -ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரியில் ஏற்கெனவே 37 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் ஜிப்மர் மருத்துவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 

கரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுவையில் இதுதான் முதல் முறை என்றார். இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார். 

தற்போது 46 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 36 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேரும் சேலத்தில் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருவதாக மோகன்குமார் கூறினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT