சாத்தூர்: இ.எல். ரெட்டியபட்டி கிராமத்தில் அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஏராளமான அமைப்புக்கள், மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், கரோனா ஊரடங்கு காலத்தில் அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறார்.
இதேபோன்று சாத்தூர் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இ. எல். ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள 350 ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட தொகுப்பு பைகளை எம் எஸ் ஆர் ராஜவர்மன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், எதிர் கோட்டை மணிகண்டன்,ரெட்டியபட்டி கிளைச்செயலாளர் சமுத்திரராஜன், ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், வழக்குரைஞர் பிரிவு மாரிமுத்து, குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.