தற்போதைய செய்திகள்

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

31st May 2020 01:25 PM

ADVERTISEMENT


அறந்தாங்கி: மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வலியுறுத்தி பதாகை ஏந்தி நின்று போராட்டம் நடத்தப்பட்டது. 

இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஆதரவு கொடுத்துள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சியும்  ஆதரவு தெரிவித்தது. அதன்படி ஞாயிறுக்கிழமை காலை 11.30 மணி அறந்தாங்கி மண்டிக்குளம் கரையில் சமூக இடைவெளியுடன் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலையில் வீட்டு வாசல்களில் பதாகை ஏந்தி நின்று போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் நாகூர் கனி கோரிக்கை கோசங்களை முன்மொழிந்தார். 

மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர்  முகம்மது ரியாஸ். மாவட்ட துணை தலைவர் முகம்மது ஆரிப், நகர மாணவரணி செயலாளர் சேக் பரீத் மற்றும் தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் கியோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல்  அனைவரையும் வரவேற்றார். இறுதியில்  ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி நன்றி கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT