தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்

31st May 2020 12:13 PM

ADVERTISEMENT

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மொசலிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஷெரிப் என்பவரின் மனைவி ரோசின்சுல்தானா என்பவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. 

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய அக்காவிற்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. உங்களை குழந்தையை கொடுங்கள் காட்டிவிட்டு வருகிறேன் என கூறி குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இது குறித்து திருப்பத்தூர் நகர காவல்நிலைய காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT