சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
* வணிக வாளகங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை, ஜவுளி கடைகள் போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்யவேண்டும். குளிர்சான வசதி இருந்தாலும் இயக்கப்படக் கூடாது.
சமீக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
* ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.
* ஜூன் 8 முதல் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி.
* காய்கறி, பழக்கடைகள்மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 வரை செயல்பட அனுமதி.
* வாடகை கார்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் மண்டலத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி.
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளுடன் செயல்பட அனுமதி.
* சைக்கிள் ரிக்க்ஷா செயல்பட அனுமதி
* குளிர்சாதன வசதிகளை பயன்படுத்தாமலும், அரசு நெறிமுறைகளை பின்பற்றி முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி.
* 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி. குளிர்சாதன வசதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* 20 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சமாக 40 பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.