தற்போதைய செய்திகள்

உலக அளவில்  கரோனா தொற்று பாதிப்பு 44.30 லட்சமாக உயர்வு

14th May 2020 08:55 AM

ADVERTISEMENT


ஜெனீவா: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 44,29,232 லட்சமாக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்தோ, தடுப்பு ஊசியோ கண்டுபிடிக்காத நிலையில், தொற்று பாதிப்பால் ஏற்படும் பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 44,29,232 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,58,995 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய உயிர்க்கொல்லிக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,98,165 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் 24,72,072 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45,921 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT