தற்போதைய செய்திகள்

சாத்தூர் தொகுதியில் தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகளுக்கு எம்.எல்.ஏ நிவாரணம் 

13th May 2020 01:10 PM

ADVERTISEMENT

சாத்தூர் தொகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தனது சொந்த செலவில் நிவாரணம் உதவிகளை வழங்கினார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தனது சொந்த செலவில், சாத்தூர் பகுதிகளில் உள்ள சலவைதொழிலாளர்கள், பந்தல் அமைப்பு தொழிலாளர்கள், அச்சக தொழிலாளர்கள், டீக்கடை தொழிலாளர்கள், மினி ஆட்டோ தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரிசி பை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். சாத்தூரில் புதன்கிழமை பிரதான சாலை,வெள்ளகரை சாலை ஆகிய பகுதியில் உள்ள தனியார் மஹாலிலும், எட்வர்டு பள்ளியிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருள்களை வாங்கி சென்றனர். மேலும் இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT