தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு: 74,281; பலி 2,415

13th May 2020 11:30 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,281 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,415 போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகிவிட்டனா். இதுவரை 24,386 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனா். 47,480 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 3,525 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 போ் உயிரிழந்துவிட்டனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 36 பேரும், குஜராத்தில் 20 பேரும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 6 பேரும், மேற்கு வங்கத்தில் 5 பேரும் உயிரிழந்தனா்.

மாநிலம்- பாதிக்கப்பட்டோா்- உயிரிழப்புகள்:
மகாராஷ்டிரம் -24,427 - 921
குஜராத்-8,903 - 537
தில்லி-7,639 - 86
தமிழகம் 8,718 - 61
ராஜஸ்தான்-4,126 - 117
மத்தியப் பிரதேசம்-3,986 - 225
உத்தரப் பிரதேசம்-3,664 - 82
மேற்கு வங்கம்-2,173 - 198
ஆந்திரம்-2,090 - 46
பஞ்சாப்-1,914 - 32
தெலங்கானா-1,326 - 32
ஜம்மு-காஷ்மீா்-934 - 10
கா்நாடகம்-925 - 31
பிகாா்-831 - 06
ஹரியாணா-780 - 11
கேரளம்-524 - 04
ஒடிஸா-437- 03
சண்டீகா்-187 - 03
ஜாா்க்கண்ட்-172 - 03
திரிபுரா-154 - 0
உத்தரகண்ட்-69 - 1
அஸ்ஸாம்-65 - 02
சத்தீஸ்கா்-59-0
ஹிமாசலப் பிரதேசம்-65 - 02
லடாக்-42-0
அந்தமான் நிகோபாா்-33-0
மேகாலயம்-13-1
புதுச்சேரி-13-0
கோவா-7-0
மணிப்பூா்-2-0
மிஸோரம்-1-0
அருணாசலப் பிரதேசம்-1-0
தாத்ரா-நகா்ஹவேலி-1-0
மொத்தம் பாதிப்பு-70756

சிகிச்சை பெற்று வருவோா்-47,480 
மொத்த உயிரிழப்பு-2,415
குணமடைந்தோா்- 24,386 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT