தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34,336-ஆக உயா்வு

13th May 2020 12:53 PM

ADVERTISEMENTபாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,370-ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,255 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 34,370-ஆக அதிகரித்துள்ளது. 31 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 737 பேர் பலியாகியுள்ளனர். 8,812 பேர் குணமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் தொற்று பாதித்தவர்களில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 13,225 பேர், சிந்துவில் 12,610 பேர்,  கைபர் பக்துன்க்வாவில் 5,021, பலூசிஸ்தானில் 2,158 பேர், இஸ்லாமாபாத்தில் 759 பேர், கில்கிட் பால்டிஸ்தானில் 475 பேர் மற்றும் பாகிஸ்தானில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

காஷ்மீருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT