தற்போதைய செய்திகள்

கரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

13th May 2020 11:12 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை புதன்கிழமை 53 ஆக உயர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஏற்கெனவே 47 பேர் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர். 

இந்நிலையில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர், கும்பகோணம், திருவையாறு, நெய்வாசல், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் குமுதா லிங்கராஜ், முதல்வர் (பொ) சு. மருதுதுரை உள்ளிட்டோர் பழங்கள், சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது. தற்போது கரோனா சிகிச்சை பிரிவில் 21 பேர் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT