அமராவதி: ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 86 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்புள்ளனர், 9,284 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,137 -ஆக உயர்ந்துள்ளது. இதில் 73 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள்.
தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 38 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 26 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த எட்டு பேரும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 46 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.