தற்போதைய செய்திகள்

திருப்பூர் அருகே பெண்ணுக்கு விஷ மாத்திரை கொடுத்து  சாகடிப்பு: கள்ளக் காதலன் கைது

10th May 2020 12:57 PM

ADVERTISEMENT


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் முத்தூரில் திருமணமான பெண்ணுக்கு விஷ மாத்திரை கொடுத்து சாகடித்த கள்ளக் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் பெருமாள்புதூர் வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (37). இவர் முத்தூர் ஹைஸ்கூல் மேட்டில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவருடைய மனைவி சங்கீதா (33). லேத் பட்டறைக்கு முன்புறம் தையல் கடை வைத்திருந்தார். முத்தூரில் பியூட்டி பார்லரும் நடத்தி வந்தார். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். 

முத்தூர் ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் விவேக் (28). இவர் கோயமுத்தூரில் ஃபைனான்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கும், சங்கீதாவுக்கும் பல மாதங்களாகக் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு பாண்டிச்சேரி ஓடி விட்டனர். கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் தங்குவதற்கு எங்கும் வீடு, லாட்ஜ் கிடைக்காமல் மீண்டும் அவரவர் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டனர்.

சங்கீதாவின் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் சமரசம் பேசி கணவர் யுவராஜுடன் சேர்த்து வைத்து குடும்பம் நடந்து வந்தது. இடைப்பட்ட சமயத்தில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென சங்கீதாவை விவேக் மிரட்டி வந்துள்ளார். தொடர்பைத் துண்டித்ததால் விவேக் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

விவேக்

இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது வீட்டில் சங்கீதா, கணவர், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 10.30 மணிக்கு காலிங் பெல் அடிக்க கணவர் யுவராஜ் கதவைத் திறந்துள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த விவேக், யுவராஜை கன்னத்தில் அறைந்து அவரையும், உடன் எழுந்து வந்திருந்த அவருடைய மகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளி உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது, சங்கீதா ரத்த வாந்தியெடுத்து இறந்து கிடந்தார். மகனை கொன்று விடுவதாக மிரட்டி சங்கீதாவுக்கு விஷ மாத்திரை கொடுத்ததாகவும், தானும் விஷ மாத்திரை சாப்பிட்டு சங்கீதாவை குரல்வளையை மிதித்துக் கொன்றதாகவும் விவேக் கூறியுள்ளார். விவேக்குக்கு அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்தனர். இதில் கை, கால்கள் முறிந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

சங்கீதாவின் சடலம் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 

சம்பவ நடந்த இடத்தை காங்கேயம் டிஎஸ்பி தனராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளக்கோவில் காவல் நிலைய துணை ஆய்வாளர் டி.முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT