திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள காண்டூர் கால்வாய், இந்தக் கால்வாயில் காலை, மாலை வேளைகளில் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 6 அளவில் 7 வயது ஆண் யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் நீரில் முழ்கிய யானை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனிடையே, யானையைக் காப்பாற்ற கால்வாயில் குதித்த வன ஊழியர் சந்துரு (24) நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, அவரது சடலம் திருமூர்த்தி அணைப் பகுதிக்கு அடித்து வரப்பட்டது. அவரது சடலத்தை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.