தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி தீவிரப்படுத்தப்படும்

10th May 2020 03:17 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றார் மண்டல கரோனா தடுப்புக் குழுக் கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம்.

மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இருப்பதால், நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை சென்றடையும் விதமாக ஆறுகள், வாய்க்கால்களில் தூர் வாரும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் உள்ளிட்டவை வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ரூ. 64 கோடி மதிப்பில் 355 இடங்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ள அரசுத் திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் மண்டல கரோனா தடுப்புக் குழுக் கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: அரசு அறிவிப்பின்படி, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதேபோல, நூறு நாள் வேலை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தூர் வாரும் பணி முடுக்கிவிடப்படும். டெல்டா பாசனத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சண்முகம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT