தற்போதைய செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று

10th May 2020 01:19 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் :  காரைக்கால் மாவட்டத்தில் பொது முடக்கம் செய்து 46 நாள்களுக்குப் பின் முதன் முதலாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வசித்த திருநள்ளாறு பகுதியில் சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அறிவித்தது முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு காரைக்கால் மாவட்டத்தை பச்சை மண்டலமாக அறிவித்தது.

பொது முடக்கம் 17-ஆம் தேதி முடியவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறியது:  திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர், வழக்கு ஒன்றில் திருநள்ளாறு காவல்நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்க தயார்படுத்தப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று தொடர்பான மருத்துவப் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று உறுதியாயிருப்பது தெரியவந்தது. இதனால் அவரை காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், மேலும் அவர் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் தொற்றுஓ குறித்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டுநரை கைது செய்த திருநள்ளாறு காவர்களுக்கும்  தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளகுடுகிறது. இவர்களுக்கான பரிசோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டைச் சுற்றி 500 மீட்டர் முதல் 1 கி.மீட்டர் வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிப்போர் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வருவதற்கு, ஏற்கெனவே கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட முதல் நபராவார். காரைக்கால் மாவட்ட மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தொற்று பரவாமல் தடுப்பதற்கு கூறப்பட்டுவரும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார். பேட்டியின்போது துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உடனிருந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT