தற்போதைய செய்திகள்

முத்துப்பேட்டை பகுதியில் வனக் குழுவினர் நலத்திட்ட உதவிகள்

10th May 2020 02:48 PM

ADVERTISEMENT


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வறுமைக்கோட்டில் தவித்து வந்தவர்களுக்கு வனக் குழுவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை மறவக்காடு கரிசல் காடு உள்ளிட்ட பகுதிகளில் தோற்று ஊரடங்கு காரணமாக, கடந்த 40 நாள்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி வறுமையில் தவித்து வந்தவர்களுக்கு கும்பகோணம் பரம சாந்தி அமைப்பு மற்றும் வனத்துறையினர் இணைந்து நலத்திட்ட உதவிகளை நழுவினர். 

நலத்திட்ட உதவிகளை மாவட்ட வன அலுவலர் அறிவொளி, பரமசாந்தி அமைப்பின் இயக்குநர் கண்ணன் ஆகியோர் 200 குடும்பங்களுக்கு தலா 7 கிலோ கொண்ட அரிசிப் பைகளை வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT