தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் பகுதியில் 306 கோயம்பேடு வியாபாரிகள் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை

10th May 2020 03:00 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் 360 கோயம்பேடு வியாபாரிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், அந்த வீடுகளில் ஒட்டு வில்லை ஒட்டவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியோரால் கரோனா நோய் தொற்று பரவியது. தற்போதைய நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகளால் கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு அடுத்து வரும் நாள்களில் செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் பலர் சென்று வருகின்றனர். இதில் திருவள்ளூர் நகராட்சியில் கடந்த வாரம் சிலருககு கரோனா நோய்த் தொற்று ரத்த பரிசோதனையில் உறுதியானது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிபூண்டி ஆகிய பகுதியில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்களில் 101 பேருக்கு தொற்றால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று திரும்புவோருக்கு கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வியாபாரிகள் தொடர்பான விவரங்களை பொது சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சேகரித்தனர். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள சென்னை கோயம்பேடு சென்று வந்த வியாபாரிகள் வீடுகளில் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதேபோல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 306 வியாபாரிகள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் 28 நாள்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு வீடுகளிலும் ஒட்டு வில்லையும் அந்தந்த பகுதி வட்டார சுகாதாரம் மையம் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாக பொது சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT