தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே 100 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆசிரியர்கள் நிவாரணம்

10th May 2020 02:53 PM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 100 மாணவர்களின் நலிந்த குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ரூ45,000 மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் பூங்குழலி மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இதில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகையன், ஆசிரியர்கள், கார்த்திகேயன், மாதவன், சுகந்தி, ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, கனிமொழி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

 மாணவர்கள் கரோனாவை தடுக்க ஒத்துழைப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT