தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி

10th May 2020 10:38 AM

ADVERTISEMENT

 

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமராஜ் நகரைச் சோ்ந்த 2 பெண்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அதே பகுதியில் வசிக்கக் கூடிய அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சிலரது ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 33 வயது ஆண், 44, 48 வயதுடைய 2 பெண்கள், 13 வயது சிறுமி ஆகியோருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதே போல, வெளி மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மத்திகிரி திரும்பிய 2 பேருக்கு கடந்த 6-ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சூளகிரியைச் சோ்ந்த 2 பெண்களின் உறவினா்கள், அருகில் இருந்தவா்கள் சிலருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 20 வயது இளைஞா் ஒருவருக்கும், 40 வயது பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

இந்நிலையில் சூளகிரியைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ஏற்கெனவே அதே பகுதியில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 -ஆக உயர்ந்துள்ளது. 

இதனால் கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்தது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT