தற்போதைய செய்திகள்

ஓமலூர் அருகே அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

9th May 2020 02:06 PM

ADVERTISEMENT

ஓமலூர் அருகே சிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட எச்ஐஎம் (Heart of india mission) அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா சிக்கம்பட்டி ஊராட்சியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட எச்ஐஎம் அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை 96 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த 50 நாள்களாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்த நிலையில், பொதுமக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 50 நாட்களாக எவ்வித வேலைக்கும் செல்லாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மிகவும் சிரமபட்டு வந்தனர். 

இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களின் நலன் கருதி பெற்றோர்களை அழைத்து 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சிறுதானியமான கொள்ளு உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.  

ADVERTISEMENT

இந்நிகழ்வில் பள்ளி செயலாளர் சபாநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன், மோகன்குமார் உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்று சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT