தற்போதைய செய்திகள்

ஆக்ராவில் மேலும் 26 பேருக்கு தொற்று: பாதிப்பு 706 ஆக உயர்வு 

9th May 2020 01:54 PM

ADVERTISEMENT


ஆக்ரா: ஆக்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 706 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் கூறுகையில், இதுவரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 303 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஆக்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 706 ஆக உயர்ந்துள்ளது. புதிய வழக்குகள் பெரும்பாலும் 42 ஹாட்ஸ்பாட்களிலிருந்தும், பாதிக்கப்பட்ட சில நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களிடமிருந்தும் பரவி உள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை இதுவரை 8,835 பேரிடம் மாதிரியை சேகரித்துள்ளது.

ஃபிரோசாபாத்தில் 174  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மதுராவில் புதிதாக தொற்று பாதித்த 2 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ராவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

நகரத்தின் மூத்த மருத்துவர்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள், பொதுமக்கள் தங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றுக்கொள்ள வேண்டும், பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

"மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் உருவாக்கப்படும் வரை, கரோனா வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பில்லை. இதற்கு ஒரே தீர்வு அல்லது மாற்று மருந்து, தனிப்பட்ட சுகாதாரம், தனிமனித விலகல், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி" மட்டுமே என்று மூத்த மருத்துவர் அசோக் விஸ் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT