தற்போதைய செய்திகள்

திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது

9th May 2020 11:23 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை   காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவர் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து தேரடி பஜாரில் பகுதியில் தெரு ஓரத்தில் வசித்து வந்தார். சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் கல்லை போட்டு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் என்பவர் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். 

சிறிது நேரத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவலர்கள் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே செல்வராஜ் உடலை கைப்பற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT