தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பெண்ணுக்கு கரோனா

9th May 2020 08:42 AM

ADVERTISEMENT

சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 45 வயதுடைய பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இக்கிராமம் மூன்று பக்கம் கடலாலும் , ஒரு பக்கம் கொள்ளிடம் ஆற்றாலும் சூழப்பட்ட தீவு கிராமம் ஆகும்.  

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவருக்கு தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவர் கர்ப்பினியான தனது மகளின் பிரசவத்துக்காக சிதம்பரத்தில் ஓர் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு கர்ப்பினிக்கு கரோனா சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவருக்கு இல்லை. மகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காக தாய், கடந்த 6 ஆம் தேதி தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து சென்றுள்ளார். அவரது ரத்த மாதிரி மற்றும் சளி ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையால் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து அந்த பெண்ணை பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு நடக்கிறது. மேலும் அக்கிராமத்தில் தடுப்புகள் அமைத்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தபடுகிறது. அந்த பெண் எங்கெங்கு சென்றார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT