தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் இளைஞர் வெட்டிக் கொலை

8th May 2020 09:31 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் அருண்குமார் (27). இவர் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்த நிகழ்விடத்துக்கு வந்த கிழக்கு காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலையில், தனது நண்பர்களான கதிர்வேலு, முத்து, பிச்சாண்டி ஆகியோருடன் வீட்டிலேயே வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மது அருந்தியது தெரிய வந்தது. அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் கதிர்வேலு, முத்து, பிச்சாண்டி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT