தற்போதைய செய்திகள்

திருவாரூர் அருகே மர்மமான முறையில் பள்ளி மாணவி சாவு

8th May 2020 10:43 AM

ADVERTISEMENT


திருவாரூர் அருகே வியாழக்கிழமை இரவு பாட்டி வீட்டிற்குச் சென்ற 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் (45) இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .

இந்த நிலையில் அவரது மகள் மௌனிகா(17). 12 -ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அதே தெருவில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு உறங்குவதற்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அப்பகுதி மக்கள் அருகே உள்ள வயல் வேலைக்கு சென்ற போது அங்கு காயத்துடன் மௌனிகா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மெளனிகாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் பள்ளி மாணவியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT