தற்போதைய செய்திகள்

தடையை மீறி திறக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

8th May 2020 12:20 PM

ADVERTISEMENT


பென்னாகரம்: தடையை மீறி திறக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் வாகனம் பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு அரசு தளர்வு அளித்தது. 

இந்த நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் தடையை மீறி அழகு சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த கடைகள் உட்பட 3 கடைகளுக்கு பென்னாகரம் வட்டாட்சியர் சேதுலிங்கம், வருவாய் ஆய்வாளர் சிவன் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல் ஆகியோர்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை காலை 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT