தற்போதைய செய்திகள்

வாழப்பாடி: ஒடிசா தொழிலாளர்கள் 78 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

8th May 2020 08:35 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 69 தொழிலாளர்கள், மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் வாழப்பாடியில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை இரவு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர்.

தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகளின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்களை, சிறப்பு ரயில்களில் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 15 பேர், மற்றும் சங்ககிரி உள்ளிட்ட பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 63 பேர் ஆக மொத்தம் 78 பேர், வியாழக்கிழமை இரவு வாழப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரவழைக்கப்பட்டனர்.  வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஒடிசா மாநில தொழிலாளர்களை பரிசோதித்து, சான்றிதழ் வழங்கினர்.

ADVERTISEMENT

வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கினர்.

வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி, வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில்,    ஒடிசா மாநில தொழிலாளர்கள், அரசுப்பேருந்துகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் இந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT