தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் மதுக் கடைகள் திறப்பு இல்லை

2nd May 2020 11:44 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியதால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பச்சை மண்டலத்தில் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளை நிபந்தனைகளுடன் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்த நிலையில் மது பிரியர்கள் மதுபான கடைகள் எப்போது திறக்கும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

இதையடுத்து பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 120 டாஸ்மார்க் கடைகளும் திறக்கப்படாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் அறிவித்துள்ளது மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT