தற்போதைய செய்திகள்

சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கு கரோனா தொற்று உறுதி

2nd May 2020 02:10 PM

ADVERTISEMENT

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில்  வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோயம்பேட்டில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT