தற்போதைய செய்திகள்

வெனிசுலா சிறையில் கலவரம்: 46 பேர் பலி

2nd May 2020 01:52 PM

ADVERTISEMENT



கராகஸ்: வெனிசுலா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தலைநகர் கராகசில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள குவானாரேயில் அமைந்துள்ள லாஸ் லானோஸ் சிறையில் வெள்ளிக்கிழமை சில கைதிகள் தப்பிக்க முயன்றபோது கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தின் போது குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை "மிகவும் கவலைக்கிடமாக" உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை இயக்குநர் கார்லோஸ் டோரோவும் ஒருவர், கைதிகள் துப்பாக்கிகளையும் கூர்மையான ஆயுதங்களையும் பயன்படுத்திய மோதல்களில் ஈடுபட்டதில் அவர் பின்னால் மற்றும் அவரது தலையில் ஆயுதங்கள் பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கைக்காக வெனிசுலா தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சிறைச்சாலையில் இந்த கலவரம் நிகழ்ந்துள்ளது. 

தென் அமெரிக்க நாட்டில் இதுவரை 300- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் இறந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT