தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

16th Mar 2020 01:48 PM

ADVERTISEMENT


மும்பை: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  37 ஆக அதிகரித்துள்ளது.  

சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள் மூலம் இந்தியாவிலும் கரோனா பரவியுள்ளது. தலைநகா் தில்லியில் மட்டும் இதுவரை 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 107-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 

கேரளத்தில் 22 பேருக்கும், கா்நாடகத்தில் 6 பேருக்கும், லடாக்கில் 3, ஜம்மு-காஷ்மீரில் 2, தெலங்கானாவில் 3, ராஜஸ்தானில் 2, ஆந்திரம், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவா் என கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 107 போ் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 17 போ் வெளிநாடுகளைச் சேரந்தவா்கள். இவா்களில் 16 போ் இத்தாலியா்கள். ஒருவா் மட்டும் கனடா நாட்டவா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 115-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 37 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.  

மகாராஷ்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 33 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புஇருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் மும்பை, ஒருவர் நவி மும்பையைச் சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT