தற்போதைய செய்திகள்

அம்மாவை காணவில்லை: திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டுக்குட்டி புகார் மனு

16th Mar 2020 03:11 PM

ADVERTISEMENT

திருச்சி: தனது அம்மாவை காணவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டுக்குட்டி மூலம் நூதன முறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டித் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் வளர்த்து வந்த 3 ஆடுகளை மர்மநபர்கள் சிலர், இரவு நேரத்தில் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுதொடர்பாக, உறையூர் காவல்நிலையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தனது மனு மீதான நடவடிக்கை தொடர்பாக ஆன்-லைன் மூலம் சரிபார்த்தபோது, இன்னும் முன்னேற்றமில்லை என பதில் கிடைத்துள்ளது. இதையடுத்து மீண்டும் ஒரு மனு கொடுத்து, அந்த மனு மீதான நடவடிக்கை நிலுவையில் இருப்பதாக தெரிவயவந்துள்ளது.

இதையடுத்து, தனது ஆட்டுக்குட்டியின் கழுத்தில் எனது அம்மாவையும், அண்ணனையும் மீட்டுத்தாருங்கள் என பதாகையை அணிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகார் மனு அளிக்க வந்திருந்தார்.

ADVERTISEMENT

ஆட்டுக்குட்டியை மனு அளிக்கும் வரிசையில் நிறுத்தி வைத்திருந்ததை பொதுமக்கள் பார்த்து விசாரித்தபோது ஆடுகள் திருடுபோன சம்பவம் தொடர்பாக புகாரளிக்க வந்திருப்பது தெரியவந்தது.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT