தற்போதைய செய்திகள்

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

16th Mar 2020 02:38 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கை ரத்து செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டில் பங்கேற்க வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகிகள், இடையே நடந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக வழக்குப்பதிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக விழுப்புரத்தில் வழக்கு பதியப்பட்டது.

பாமக ராமதாஸ், கட்சியினர் 362 பேர் மீது வழக்கு பதியப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

சட்ட விதிகள் படி காலம் கடந்த இந்த நடவடிக்கை செல்லாது என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT