தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே கேஸ் சிலிண்டர் லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

13th Mar 2020 08:20 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இருந்து கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உறங்கியதால் காலை 6.30 மணியளவில் டீச்சர்ஸ் காலனி அருகே சாலை ஒரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இதில் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு ஆட்டோக்களும் சேதமடைந்தன. லாரி ஓட்டுநர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இந்த விபத்தால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

விபத்து குறித்து சூரம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT