தற்போதைய செய்திகள்

சிஏஏ-க்கு ஆதரவாக நெல்லையில் இந்து முன்னணியினர் தொடர் பிரார்த்தனை

2nd Mar 2020 11:27 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணியினர் தொடர் பிரார்த்தனையை திங்கள்கிழமை நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் பேரணி, பொதுக்கூட்டங்களை பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடங்கியுள்ளன. 

திருநெல்வேலியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவு பேரணி நடைபெற்ற நிலையில், இந்து முன்னணி சார்பில் தொடர் பிரார்த்தனை நிகழ்ச்சி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி எதிரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து முன்னணி மாநில நிர்வாகி குற்றாலநாதன் தலைமை வகித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து பிரச்னைகள் உருவாகுவது நீங்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. தேவாரம், திருவாசம் உள்ளிட்டவை தொடர்ந்து முற்றோதுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT