தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

26th Jun 2020 10:24 AM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிஜி போலீஸ் தில்பாக் சிங் கூறுகையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி  மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து ராணுவம், காவலர்கள் மற்றும் சிஆர்பிஎஃப்  வீரர்கள் இணைந்து பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான், அவனிடம் இருந்து ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது" என்று தில்பாக் சிங் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT