தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிப்பு; பலி 15,301-ஆக அதிகரிப்பு

26th Jun 2020 09:45 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4.90 லட்சமாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், புதிதாக 17,296 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது;  407 போ் உயிரிழந்தனா்.13,940 பேர் குணமடைந்துள்ளனா்.

இதுவரை மொத்தம் 2,85,637 போ் குணமடைந்த நிலையில், 1,89,463 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,47,741 போ் பாதிக்கப்பட்டுள்ளனர், 77,453 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6,931 பேர் பலியாகியுள்ளனர். 

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 25 வரை 77,76,228 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,446-க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT