தற்போதைய செய்திகள்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு: மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

26th Jun 2020 01:13 PM

ADVERTISEMENT


மணப்பாறை: சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்யவும், நிவாரணம் அளிக்கவும் வலியுறுத்தி மணப்பாறை பேருந்துநிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்சியின் வட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவல்துறையினரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கேட்டும் கோஷங்கள் எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT