தற்போதைய செய்திகள்

கரோனா தொற்று அச்சம்: கெளமாரியம்மன் ஆனித்திருவிழா நிறுத்தம்

26th Jun 2020 10:44 AM

ADVERTISEMENT


பெரியகுளம் கெளமாரியம்மன் ஆணிப் பெருந்திருவிழா இந்த ஆண்டு தடை செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கௌமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாத்துரை தெரிவித்ததாவது: கரோனா தொற்று அச்சத்தால்  வரும் ஜுன் 30 ஆம் தேதி நடைபெற இருந்த கொடியேற்றும் விழா மற்றும் ஜுலை 6 -ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் கம்பம் நடுதல் மற்றும் ஜூலை -14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மாவிளக்கு நிகழ்ச்சி, ஜூலை 15 ஆம் தேதி (புதன்கிழமை ) தீச்சட்டி செலுத்துதல் மற்றும் ஜுலை 21 ஆம் தேதி  பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT