தற்போதைய செய்திகள்

கம்பத்தில் ஸ்ரீ ஆதி மகா கணபதி கோவில் பிரதிஷ்டை விழா

26th Jun 2020 10:39 AM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் ஸ்ரீ ஆதி மகா கணபதி விக்ரக பிரதிஷ்டை விழா 2 நாட்கள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் கோம்பை ரோடு தண்ணீர் தொட்டி தெருவில் ஸ்ரீ ஆதி மகாகணபதி நூதன, விக்ரக, பிரதிஷ்டை, திருக்குட, பால்குட, நன்னீராட்டு விழா புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ மகா கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர சபை உறுப்பினர் எம். ஆர். கார்த்திகேயன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT