தற்போதைய செய்திகள்

கோவையில் கரோனாவுக்கு முதியவர் பலி

21st Jun 2020 01:05 PM

ADVERTISEMENT


கோவை: கோவையில் கரோனா பாதிப்புக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார்.
கோவை, வேலாண்டிப்பாளையத்தை சேர்ந்த 77 வயது முதியவர் மூச்சுத்திணறல் பாதிப்புக்காக சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கரோனா பரிசோதனைக்கானா சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவையில் கரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன்மூலம் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT