தற்போதைய செய்திகள்

இந்தியா 20 வீரர்களை இழந்தது ஏன்? - ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி

20th Jun 2020 10:31 AM

ADVERTISEMENT


இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால், இந்தியா ஏன் 20 வீர‌ர்களை இழந்த‌து? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் வீர மரணம் அடைந்தனா்.

இதையடுத்து லடாக் எல்லைப் பிரச்னையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், எல்லையின் கள நிலவரத்தை தெரிவிப்பதில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. 

இந்நிலையில், இந்திய, சீன எல்லையில் நிகழும் பதற்றம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தில்லியில் லோக் கல்யாண் மாா்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து காணொலி முறையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், கிழக்கு லடாக் எல்லையில், இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும் அவா்களிடம் இருந்து நமது படையினா் நாட்டை பாதுகாப்பாா்கள்.

நம் மண்ணில் ஓா் அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு வலிமை மிக்க படைகள் நம்மிடம் உள்ளன. நமது படைகளால் ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த முடியும். நமது பாதுகாப்புப் படையினா் மீது ஒட்டுமொத்த தேசமும் முழு நம்பிக்கை வைத்துள்ளது.அவா்களுக்கு இந்த தேசமே துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.  அண்டை நாடுகளுடன் நட்புறவையும் சமாதானத்தையும் இந்தியா விரும்புகிறது. ஆனால், நாட்டின் இறையாண்மையே உயரியது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிலையில், பிரதமர் மோடி பேசியது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்ச ப.சிதம்பரம், சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்; ஊடுருவல் இல்லை என்றால் மே 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?, ஜூன் 16 மற்றும் 17 -ஆம் தேதிகளில் ஏன் இருநாட்டு துருப்புக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்?, இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே ஏன்?, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?, அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக, எதைப் பற்றி ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? என்றும் இந்தியா 20 வீரர்களை இழந்தது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT